என்ன… தண்ணிக் கேனு போடுறவன் கூட புதுசா சகவாசம்…
ஓ…
இங்கனதான்
இருக்கீரா… ஒண்ணுமில்ல… என்ன ரேட்டுக்கு
விக்குறான்னு சும்மா கேட்டுப் பார்ப்போமேன்னு கேட்டேன்…
யாருக்கு காது குத்துறீரு… உம்ம பேரனுங்க மினரல் வாட்டருதான் குடிப்பேன்னு
வீட்டுல கொடத்தப் போட்டு உடைக்கானுங்களாமே…
அதான பார்த்தேன்… உம்ம காதுக்கு விஷயம் வராம இருக்காதே.. கழுதைங்க சொன்னாலும்
கேக்க மாட்டேங்குதுங்க… அதான் தண்ணி கேனு
வாங்கலாமுன்னு ஒரு யோசன…
இருக்கட்டும்… இருக்கட்டும்… உமக்கு ஞாபகம் இருக்கா.. உங்க அய்யா இருந்தப்போ… வீட்டுத்
திண்ணையில குடிக்கத் தண்ணி வச்சிருப்பாரு…
ஆமா…
எம்மாம் பெரிய
பான… உம்ம தொந்தி
வயிறு தண்டி இருக்கும்ல..
பக்கத்துலையே உம்ம மூக்கு சைசுக்கு ஒரு டம்ளரும் இருக்குமே… அதை உட்டுட்டீரே…
எம் மூக்கு சைசுக்காக? இருக்கும்… இருக்கும்… அப்ப தெருவுல வாரவுகஇ போறவுகள்ளாம் வெயிலு கொளுத்துனா
பானையில தண்ணியக் குடிச்சிட்டு திண்ணையில உக்காந்து எந்திச்சி போவாங்க…
இப்போ பார்த்தீரா… அந்த வீட்டுக்காரவுகளே தண்ணிய காசு குடுத்து வாங்கப்
போறாக..
நீரு அங்கதேன் வந்து நிப்பீருன்னு தெரியும்… எனக்கு நெசமாவே
மனசு கேக்கல… தண்ணியப் போயி
காசு கொடுத்து வாங்கலாமான்னு மனசு கெடந்து அடிச்சுக்குது… இந்த பயகதேன்
ஒத்தக் காலுல நிக்கானுவ…
வாங்குறதுதேன் வாங்குறீரு… அப்படியே ஆளுக்கு ரெண்டு பாக்கெட்டு காத்தும்
வாங்கிக் குடுக்க வேண்டியதுதான…
நான் மனசு ஆறாம வந்து புலம்பிக்கிட்டு இருக்கேன்… உமக்கு இந்த
நக்கலுக்கு மட்டும் குறைச்சலு இல்ல… ஆள வுடும்… வீட்டுல சோலி கெடக்கு…
அட கோவிக்காதீரும்… நில்லும்… அப்பிடி என்னத்த சொல்லிப்புட்டேன்… நாட்டுல
நடக்குறதத்தான சொல்லுறேன்..
ஓகோ…
தண்ணி வித்த
பயக.. காத்தையும் விக்க ஆரம்பிச்சுட்டானுகளா… எந்த ஊருக்காரனுக்குயா இந்த மாதிரி புத்தி போவுது....
எல்லா ஊருக்காரனுக்கும்தேன்… நம்ம ஊருக்கு வர்றது கனடா நாட்டுக்காரன்.. விடாலிட்டி ஏர்னு ஒரு கம்பெனி…
நம்ம முத்துமாரி விலாஸ் சோடா கம்பெனி மாதிரி…
இல்ல… இவன் ரொம்ப பெருசு.. அவன்தான் சுத்தமான காத்த பாட்டில்ல
அடைச்சு விக்கப்போறான்..
ம்ம்ம்… வரட்டும்… வரட்டும்… காத்த காச குடுத்து வாங்குற அளவுக்கு நம்ம ஊருல கேனையனுங்க
இருக்காங்கன்னு தப்பா கணக்கு போட்டுட்டான் போல இருக்கு…
உம்ம கணக்குதேன் தப்பு… ரொம்ப கேனயனுங்க இருக்காங்க…
என்னய்யா வயித்துல புளியக் கரைக்குறீரு…
ஆமா…
மெட்ராசுஇ
டெல்லியில எங்க பார்த்தாலும் கெட்டுப்போன காத்துதான்.. அம்புட்டு வண்டி ரோட்டுல
ஓடுது… புகையா கக்குது… அவுகள்ல பலரு
காத்து வாங்க காத்துக்கிட்டு இருக்காகலாம்…
கலி முத்திப் போச்சு… ஆமா ஒரு பாட்டிலு காத்து எம்புட்டு சொல்லுவான்.. எட்டணா
இருக்குமா…
உம்ம பாட்டன் தட்டாம் பயறு வாங்கித் தின்ன காலத்துலையே
இருக்கீரே… 3 லிட்டரு கேன்ல
அடைச்ச காத்து 750 ரூபாயாம்…
அட சண்டாளப் பாவியா…
நீரு ஒரு வாட்டி மூச்சை இழுத்து விட்டீருன்னா 12 ரூபா
எட்டணாவுக்கான காத்து காலியாப் போயிடும்…
சம்பாதிச்சத தண்ணிய செலவழிக்கறத விட்டுட்டு காத்தா
செலவழிக்கப் போறாங்க போல…
யோவ்… அங்க பாரும்… மூத்த பேரன்
வாரான்… என்ன
பேசிக்கிட்டிருந்தீங்க தாத்தான்னு உம்ம கிட்ட கேப்பான்..
சரி..
நாம பேசுன விஷயத்தை சொல்லாதீரும்… அப்புறம் ரெண்டு
பாட்டிலு காத்து வாங்கிக் குடுன்னு வேட்டிய உருவிருவான்… வேற ஏதாவது
சொல்லி சமாளிச்சுரும்.. என்ன சொல்லுவீரு…
அப்படியே காலாற நடந்து போயி காத்து “வாங்கிட்டு” வரலாமான்னு
பேசிக்கிட்டு இருந்தோமுன்னு சொல்லுவேன்…
நீரு ஒத்தடம் கொடுக்கீரா… ஓங்கிக் குத்துறீரான்னே தெரியல போரும்…
1 comments:
அருமை
கருத்துரையிடுக