நான் காதலன்..
நீ காதலி ..
அது ஒரு பெருமழை.
உதிரும் துளிகளை
உதடுகளில் ஏந்தினாய் நீ...
நீ விட்ட காகித கப்பல்களுக்கு
குடை பிடித்து திரிந்தேன் நான்...
நான் கணவன்..
நீ மனைவி..
இது ஒரு பெருமழை.
காலிக் குடங்களோடு
பின் வாசல் விரைகிறாய் நீ...
காணாமல் போன
ரெயின் கோட்டை
கண்டபடி திட்டுகிறேன் நான்...
3 comments:
நல்ல கவிதை... நானும் இந்தக் கோணத்தில் சிந்தித்திருக்கிறேன், ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன், அதுவும் மழையைவைத்தே!
அன்புடன்,
நான் விஜய்
கவிதை அருமை...
பெரும்பாலான காதலரின் திருமணத்திற்கு பின்பு நிகழும் நிகழ்வு...
மறுக்கவியலாது...
nalla karpanai. paruva maarram nanraaka siththarikkap pattullathu. vaalththukkal.
கருத்துரையிடுக